ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு
அறிமுகம்
நெடிய நீண்ட வரலாறுடைய தமிழ்மொழி வழங்கி வரும் நாடு களில் இலங்கை குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. இந்தியாவின் தமிழ் வழங்கி வரும் பிரதேசமாகிய தமிழகத்திற்கு மிக அண்மையில் இலங்கை அமைந்திருப்பதனால் தமிழகத் திற்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் மிகப் பழங் காலம் முதல் இருந்து வந்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கு மிடையிலான தொடர்புகளை மிகப்பழைய இதிகாச புராணங் களில் இருந்து அறியமுடிகின்றது. வால்மீகியின் இராமாயணம் இலங்கை வேந்தனாகிய இராவணன் சிறந்த சிவபக்தன் எனவும் அவன் கோணேசர் ஆலயத்தை வழிபட்டு வந்ததாகவும் கூறுகின் றது. மகாபாரதம் ஆதி பருவப் பகுதியில் தெற்கே தலயாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் திருக்கேதீஸ்வரனை வழிபட்ட பின்னர் அல்லி அரசாணியைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றது. புராணங் களில் ஒன்றாகிய மகாபாகவத புராணம் இராவணனின் இலங்கா புரியைக் குறிப்பிடுகின்றது. தமிழகத்திற்கும் இலங்கைக்கு மிடையிலான தொடர்புகளை பட்டினப்பாலை, அகநாநூறு போன்ற சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
"ஈழத்துணவும் காளகத்தாக்கமும்" என வரும் பட்டினப்பாலை வரிகளும் 'நன்னகர் மாந்தை முற்றத்துண்ணா பணிதிறை தந்த பாடுசார் நன்கலம் பொன்செய்பாவை, வைரமோடாம்பல்
ஒன்னுவாய் குவையியன்ற நிலத்தினைத் துறந்த நிதியத்தன"
எனவரும் அகநாநூற்றுப்பாடல் வரிகளும், தமிழ் நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையேயிருந்த வாணிபத்தொடர்பையும் உறவையும் வெளிப்படுத்துகின்றன. தமிழ் நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்தாலும் தமிழக இலக்கிய வரலாற் றோடு ஈழத்து இலக்கிய வரலாற்றை பொருத்தி நோக்கும்போது 2000 வருடகால பழமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியம் ஈழத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டுவரை தெளிவாக அறிய இயலாதவாறு தொய்ந்தே காணப்படுகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக