பிரதேச வழக்குச் சொற்கள்
பிரதேச ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வேறுபட்டு வழங்கும் பேச்சு வழக்குச் சொற்களே பிரதேச வழக்குச் சொற்கள் எனப்படும்.
1. வடக்குப் பிரதேசம்
ஆறுதலா - மெதுவாக
இண்டைக்கு - இன்றைக்கு
இதிலை - இதிலே
இயத்து, ஏதனம் - சமையற் பாத்திரங்கள்
எப்பன் - சிறிதளவு
பொத்தகம் - புத்தகம்
காய், பிஞ்சு - மரக்கறி
கெதியா - விரைவாக
கனக்க - நிறைய
மோன - மகன்
பேந்து - பிறகு
புழகம் - மகிழ்ச்சி
முடக்கு - பாதை திருப்பம்
மோள் - மகள்
விறாந்தை - முன்கூடம்
வெள்ளமை - வேளாண்மை
2. கிழக்குப் பிரதேச வழக்கு
அந்தரங்கு - மீன் பிடிக்கும் கைவலை
அணியம் - துடுப்பு வலிப்பவர் இருக்கும் இடம்
அலவாய்க்கரை - கடற்கரையோரம்
ஆணம் - சொதி
ஏனம் - பாத்திரம்
ஒண்ணா - முடியாது
ஒள்ளுப்பம் - எள்ளிலும் சிறயது
கக்கிசம் - தொல்லை
கடப்படி - வாசல்
களவட்டி - சூடு போடும் தளம்
கெறுவம் - கர்வம்
கோணி - சாக்கு
சங்கை - ரோசம்
சார் - ஏர் செல்லும் வழி
சிறாம்பு - பரண்
சும்மாடு - சுமை தூக்க தலையில் வைக்கும் அடை
சோங்கன் - சோம்பேறித்தனம்
தலைமுறி - வாய்க்கால் பிரிந்து செல்லும் வயற்பரப்பு
துறைக்காரன் - படகோட்டுபவன்
மண்டா - மீன் குத்தும் தடி
தாரை - ஆழம் குறைந்த நீர் பகுதி, வெளி
துரவு - சிறுகேணி
மறுகா - பிறகு, பின்பு
மனே - மகனே
பத்தை - பற்றை
களவெட்டி - சூட்டுக்களம்
வெள்ளேடன் - தேங்காய்
வேலைக்காரன் கம்பு - சூடு போடும் வைக்கோலை இழுக்கும் கொழுத்தடி
3. தென்னிலங்கை வழக்கு
v ஆப்ப - அப்பம்
v இடியாப்ப - இடியப்பம்
v சல்லி -பணம்
v பசுந்து -அழகு
4. மேற்குப்பிரதேச வழக்கு
அன்ன - அன்னம்
பொன்ன - பொன்னை
நம்மளுவொழுக்கு - எங்களுக்கு
5. மலையகப்பிரதேச வழக்கு
எலை - இலை
பொழப்பு - பிழைப்பு
ஸ்ரோர் - தொழிற்சாலை
மடுவம் - கொழுந்து நிறுக்கும் இடம்
அங்கிட்டு - அங்கே
இங்கிட்டு - இங்கே
வேணா - வேண்டாம்
அப்பரம் - பிறகு
வேல - வேலை
மேல - மேலே
சுருக்கா - வேகமாக
கேட்கல - கேட்கவில்லை
ஒனக்கு - உனக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக