26.9.25

வேற்றுமை அறிமுகம்

வேற்றுமை

 

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும். அதாவது பெயர்ச் சொல்லின் இலக்கண தொழிற்பாடு வேற்றுமை எனவும் கூறுவர்.

வேற்றுமை தொடர்பாக முதன்முதலில் தனது கோட்பாட்டை முன்வைத்தவர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பியர் வேற்றுமையை முதலில் ஏழு எனக் குறிப்பிட்டு பின்பு விளி என்பதையும் சேர்த்து வேற்றுமை எட்டென வரையறுக்கிறார்.

வேற்றுமை தாமே ஏழ் என மொழிப

விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே

(தொல்.சொல். 63,64)

மேலும் தொல்காப்பியர் உருபின் அடிப்படையில் பெயர், , ஒடு, கு, இன், அது, கண், விழி எனப்பெயர் சூட்டுகிறார். இவற்றில் விழி என்பது வேற்றுமையின் பொருள் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனையவை உருபின் அடிப்படையில் சூட்டப்பட்டுள்ளன.

 

இவ்வேற்றுமையே நன்னூலார்

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப், பொருள்

வேற்றுமை செய்வன, எட்டே வேற்றுமை (291) என்கிறார்.

எவ்வகைப்பட்ட பெயர்க்கும், ஏற்குமிடத்தில், இறுதியில் நின்று, அப்பெயரின் பொருளை வேறுபடுத்தி உணர்த்துவது வேற்றுமை எனப்படும். அது எட்டுவகைப்படும் எனக் கூறுகிறார்

வேற்றுமையின் பெயர்களையும் அவற்றின் வரிசை முறையையும்,

பெயரே ஆல் கு இன் அது கண்

விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை (292) என்கிறார் நன்னூலார்.

கவிதா வந்தாள்.

கவிதாவைப் போன்றவள்.

கவிதாவினால் பாடப்பட்டது.

கவிதாவின் புத்தகம்.

கவிதாவினது வீடு.

கவிதா கண் இருக்கிறது.

கவிதா, வாருங்கள்.

,ஆல், கு, இன், அது, கண் என்ற வேற்றுமை உருபுகளை பெயர்ச்சொல் ஏற்றமையால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் அவதானித்திருப்பீர்கள்.

எனவே,

*எல்லா வகைப்பட்ட பெயர்ச்சொற்களும் இறுதியில் வேற்றுமை உருபுகளை ஏற்பதால் அதன் பொருள் வேறுபடுவதையே வேற்றுமை என்போம்.

இன்னுமொரு வகையில் கூறுவதானால்,வாக்கியத்தில் பெயர்ச்சொற்களின் இலக்கணத் தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும்.பெயர்ச்சொல்லின் சிறப்பு இலக்கணம் வேற்றுமையுருபுகளை ஏற்பதாகும்.வேற்றுமைக்கும் தனித்தனி உருபுகளும், பொருளும் உள்ளன.சில வேற்றுமைகளுக்கு சொல்லுருபுகள் உள்ளன.உருபு விரிந்து நிற்பது வேற்றுமை விரி என்றும் உருபு தொக்கு நிற்பது (மறைந்து நிற்பது) வேற்றுமைத்தொகை என்றும் சொல்லப்படும்.தமிழில் வேற்றுமை எட்டு என இலக்கணக்காரரும் எட்டைவிட அதிகமானது என மொழியியலாளரும் கூறுகின்றனர்.

வேற்றுமை எட்டு வகை உண்டு. அவை யாதெனில்

  எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை

  செயப்படுபொருள் வேற்றுமை அல்லது இரண்டாம் வேற்றுமை

  மூன்றாம் வேற்றுமை

  நான்காம் வேற்றுமை

  ஐந்தாம் வேற்றுமை

  ஆறாம் வேற்றுமை

  ஏழாம் வேற்றுமை

  விளிவேற்றுமை அல்லது எட்டாம் வேற்றுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக