17.11.25

செய்வினை, செயப்பாட்டுவினை

செய்வினை, செயப்பாட்டுவினை


செய்வினை

குறித்த ஒரு வினையை அக்கருத்தாவே செய்வராயின் அது செய்வினை எனப்படும்.
அதாவது எழுவாயை கருத்தாவாகக் கொள்ளும் வினை செய்வினை எனவும் கூறுவர்.
+ம் -
நான் கண்ணனைப் பார்த்தேன்.
தம்பி கதவை மூடினான்.
குழந்தை பால் குடித்தது.
யானை பாகனைக் கொன்றது

செய்வினைகள்
வினையடி +கால இடைநிலை + திணைபால் எண் இட விகுதி என்னும் தெரிநிலை வினைமுற்று அமைப்புடையன.

செயப்பாட்டு வினை

செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் வினை செயப் பாட்டு வினை எனலாம். செயப்படுபொருள் குன்றா வினைகளே செயப்பாட்டு வினைகளாக அமையும். எடுத்துக்காட்டாக:

யானை பாகனைக் கொன்றது.

என்னும் வாக்கியத்தில் யானை எழுவாய், பாகன் செயப்படு பொருள். கொன்றது செய்வினை. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பாகன் யானையால் கொல்லப்பட்டான்

முதல் வாக்கியத்தில் செயப்படுபொருளாக இருந்த பாகன் இந்த வாக்கியத்தில் எழுவாய். முதல் வாக்கியத்தில் எழுவாயாக இருந்த யானை இந்த வாக்கியத்தில் ஆல் உருபு ஏற்று கருத்தாப் பொருளில் வந்துள்ளது. முதல் வாக்கியத்தில் கொன்றது என்னும் வடிவில் அமைந்த வினை இந்த வாக்கியத்தில் கொல்லப்பட்டான் என அமைகின்றது. இவ்வாறு கொல்லப்பட்டான், கொல்லப்பட்டது, மூடப் படும், எரிக்கப்பட்டது, திறக்கப்படும் போன்று அமையும் வினைகளே செயப்பாட்டு வினைகள். இவை படு என்னும் துணை வினை பெற்றுவரும்.

செய்வினையில் அடிச்சொல் அடிப்படை வடிவத்தில் இருக்கும். எடுத்துக்காட்டு: பார்த்தேன், மூடினான், குடித்தது, கொன்றது. இவற்றில் பார், மூடு, குடி, கொல் என்பன அடிச்சொற்களாகும்.

செயப்பாட்டு வினையில் அடிச்சொல் செய்ய என்னும் வாய்ப் பாட்டு வினை எச்ச வடிவில் இருக்கும். எடுத்துக்காட்டு: கொல்லப் பட்டான், மூடப்படும், எரிக்கப்பட்டது, திறக்கப்படும் ஆகிய செயப்பாட்டு வினைகளில் கொல்ல, மூட, எரிக்க, திறக்க என்பன வினையெச்சங்களாகும்.

செயப்பாட்டு வினையின் அமைப்பைப் பின்வருமாறு விளக்கலாம்:

வினை எச்சம்+படு+கால இடைநிலை+திணை பால் விகுதி

கொல்லப்பட்டான் - கொல்ல+பட்ட்+ஆன்

கொல்லப்படுகிறான் - கொல்ல+படு+கிறு+ஆன்

கொல்லப்படுவான் - கொல்ல+படு+வ்+ஆன்

நாளை பல்கலைக்கழகம் மூடப்படும்

கொலை தொடர்பாகச் சந்தேக நபர் தேடப்படுகிறார்

குற்றவாளி கைது செய்யப்பட்டார்

விடுமுறைக்குப் பின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படும்

பொதுத் தேர்தலில் மூன்று அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டனர்

மேல் உள்ளவை எல்லாம் செயப்பாட்டு வினை வாக்கியங்கள்.

இவற்றில் -ஆல் உருபு ஏற்ற கருத்தா மறைந்துள்ளது. இத்தகைய கருத்தா இல்லாத செயப்பாட்டு வினை வாக்கியங்கள் தற்காலத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

+ம் -
கோவலன்கொலைசெய்யப்பட்டான்‌.
ஓவியம்குமரனால்வரையப்பட்டது.
வீடு கட்டப்பட்டது.

உழவன் வயலை உழுதான்.(செய்வினை)
வயல் உழவனால் உழப்பட்டது.(செயப்பாட்டு வினை)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக