கவனத்திற்கு
இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுதவேண்டும்.
சங்கப்பாடல் கடந்தகால வினாக்கள்
(vi) "பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே
(அ) கேண்மை என்பதன் பொருள் யாது?
(அ) காதல் / நட்பு / உறவு
(ஆ) வளைகள் செறிந்தன' என்பதனால் வெளிப்படுத்தப்படுவது யாது?
(ஆ) மகிழ்ச்சி / பூரிப்பு / சந்தோசம் / உவகை / களிப்பு
G.C.E O/L-2022(2023)
(3). (அ) இனி நினைந்து....' என்னும் புறநானூற்றுப் பாடலில் முதியவரின் ஏக்கம்
(அ) கழிந்துபோன இளமைக் கால வாழ்வை நினைத்து ஏங்குதல்.
நீர்நிலைகளில் நீராடுதல்.
மகளிரோடு கூடி மகிழ்தல்.
ஒளிவு மறைவற்ற நண்பர்களோடு கூடி விளையாடுதல்.
துணிவுமிக்க காரியங்களில் ஈருபடுதல்.
நடக்க முடியாமை, நடுக்கம், இருமல் காரணமாக தொடர்ந்து பேச முடியாமை முதலான இயலாமையுடன்கூடிய முதுமையை நினைத்து வருந்துதல்.
(ஆ) தச்சன் செய்த....' என்னும் குறுந்தொகைச் செய்யுளில் காதலியின் பிரிவுத் துயர் ஆகியன வெளிப்படுத்தப்படுமாற்றினை விளக்குக.
(ஆ) தலைவனுடன் கூடி வாழ முடியாமை.
அந்நிலையில் மனதளவில் அவனோடு வாழ்வதாக கற்பனை செய்து இன்புறல்.
பிரிவால் மெலிந்த அவளது உடல் அவளது கற்பனை வாழ்வால் பூரித்தது எனல்
(செறிந்தன வனையே) இவ்வாறாக தலைவியின் பிரிவுத்துயர் பூடகமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
G.C.E O/L-2021(2022)
02.(iii) தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்துஇன் புறூஉம் இளையோர் போல
உற்றுஇன் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்துஇன் புற்றெனம் செறிந்தன வளையே.
(அ) தலைவியின் காதல்
உணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
(அ) தலைவனைப் பிரிந்திருக்க நேர்ந்தபோதும் தலைவி அவனைப் பற்றிய நினைப்பிலேயே பூரித்தல்; அந்தப் பூரிப்பால் அவளது கைவளை செறிதல்.
(ஆ) இங்கு கையாளப்பட்டுள்ள அணியை
இனங்கண்டு விளக்குக.
(ஆ) உவமையணி
உவமானம் :- விளையாட்டுத் தேரில் ஏறி உலாவர முடியாத போதிலும் அதனை இழுத்து உருளச் செய்வதில் இன்பம் காணும் சிறுவர்.
உவமேயம் :- தலைவனோடு சேர்ந்து இன்பம் காண முடியாத வகையில் பிரிந்திருந்தாலும் அவன் பற்றிய நினைப்பில் இன்பங்காணும் தலைவி
பொதுத்தன்மை :- எய்தக் கூடிய முழுப்பயனை எய்த முடியாதவிடத்தும் ஏதோவழியில் திருப்தி காணுதல்
01.. (vi) "திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ
(அ) இங்கு
குறிப்பிடப்படும் விளையாட்டு யாது?
(அ) பாவை விளையாட்டு / வண்டற்பாவை விளையாட்டு
(ஆ) இங்கு
குறிப்பிடப்படும் பாவை எதனால் ஆக்கப்படுகிறது?
(ஆ). மணல் / மண் / வண்டல் /களி
01. (iii). பொய்கை ஊரன் கேண்மை
செய்துஇன் புற்றெனம் செறிந்தன வளையே.
(அ) பொய்கை ஊரன்' என்பவன் நானிலத்துள் எந்நிலத்தைச் சேர்ந்தவன்?
(அ) மருத நிலத்திற்குரியவன் / வயலும் வயல் சார்ந்த இடத்திற்குரியவன்
(ஆ) வளைகள் செறிந்தமைக்கான காரணம் யாது?
(ஆ) தலைவனுடனான நட்பை நினைத்தலால் / அன்பை / காதலை
05. இனி நினைந்திரக்க மாகின்று..." என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில்.
(அ) இளமைக் காலத்து உணர்வுகளும்
(அ). இளமை மைந்தர் மகளிருடன் இணைந்து குளிர்ந்த பொய்கையில் விளையாடி மகிழ்தல்.
நீர்த்துறையிலுள்ள உயர் மருத கிளையில் இருந்து துடுமென பொய்கையில் குதித்தல்.
கரையில் நிற்போர் வியந்து பார்க்கும் படி நீரின் அடியிலுள்ள மண்ணை எடுத்து வந்து காட்டிய ஒளிவு மறைவு அறியா இளமை.
(ஆ) முதுமைக் காலத்து உணர்வுகளும்
சித்தரிக்கப்படுமாற்றினை விளக்குக.
(ஆ) பூண் பூட்டிய தடியை ஊன்றி நடக்கும் நிலை
நடுக்குற்ற நிலை
இடையிடையே இருமல் ஏற்படும் நிலை
தொடர்ந்து பேச முடியாத நிலை (சில சொற்கள் மட்டுமே பேசக்கூடிய நிலை.)
இவ்வாறான இரு நிலைகளையும் முதுமை நிலையில் கழிவிரக்கத்துடன் உணர்தல்,
G.C.E O/L-2016
01. (iii) ".... நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே"
(அ) "கேண்மை" என்பதன் பொருள் யாது?
(அ) நட்பு / உறவு / காதல்
(ஆ) பொய்கையூரன் என்ற தொடர் எந்நிலத்துத் தலைவனைக் குறித்து நிற்கிறது?
(ஆ) மருத நிலம்
02. (iii) .... குளித்து மணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுந்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சில சொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே"
(அ) முதுமையின் இரங்கத்தக்க நிலை இங்கு எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
(அ) நடுங்குதல், மிகுதியான இருமல், பேசுவதற்கு சிரமப்படல், தண்டூன்றி நடத்தல்.
(ஆ) கல்லா விளமை என்பதனூடாக இளமைப் பருவத்தின் எத்தகைய தன்மை புலப்படுத்தப்படுகிறது?
(ஆ) விளைவுகளை ஆராயாது செயற்படும் இளமைப் பருவம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக