தமிழ் இலக்கிய நயம்
உரைப்பகுதி
G.E.C.O/L- 2024(2025)
2. கீழ்க்காணும்
உரைப்பகுதியை அல்லது செய்யுட் பகுதியை வாசித்து, தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
எழுபதுகளின் இறுதியில் தமிழ்ச் சூழல் கொஞ்சம் முகத்துக்குச் சோப்பு போட்டு கழுவிக்கொண்டு கண்ணாடி பார்த்துத் தன்னைத் திருத்திக்கொண்டபோது பாலுமகேந்திரா புதிய சட்டகங்களின் மூலமாக அசையும் பிம்பங்களுக்குள் ஒரு கவித்துவத்தை நிகழ்த்தினார். முன்னதாக தேவராஜ், மோகன், பாரதிராஜா போன்றோருடைய பழநிலை மாற்றங்கள் தமிழரின் ரசனையை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்த உன்னதமான தருணம் அது. சினிமாப் பாணியில் சொன்னால் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சன்ரைஸ் ஷாட் நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்கள். அதுவரை வசனங்களையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே நம்பிய தமிழ்ச் சினிமா பின்புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்,
இத்தனைக்கும் நிவாஸ் போன்றவர்கள் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற பாரதிராஜாவின படங்கள் மூலமாக செறிவான கட்டமைவை காமிரா கோணங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், இயறகையின் நுண்மையை சூரிய பிரமையில் பிரதிபலிக்கும் மனிதர்களைக் கடந்த இதர உயிர்களின் அழகை அதன் இயல்போடு மிகைப்படாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டிய கலைஞன் பாலுமகேந்திரா ஒருவரே. அழியாத கோலங்களின் பூவண்ணம் போல நெஞ்சம் பாடலில் ஷோபா,
பிரதாப் போத்தன் நடந்து வரும் காட்சிகளில் அவர்களைக் காட்டிலும் உற்சாகமாகக் காற்றுக்குத் தலையாட்டும் ஆற்றோரம் வளர்ந்த நாணல்களின் நெஞ்சை அள்ளும் அழகு தமிழ்ச் சினிமாவின் கவித்துவங்களுக்குத் துவக்கப் புள்ளி மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற ஓடை, வயல்வெளி. மணற்பரப்பு, பாலம். மரங்கள். நாணல், புதர்கள் ஆகியனவும் பாத்திரங்களாக மாறி தமிழின் நிலப்பரப்புக்கான சினிமாவாக அழியாத கோலங்கள் உயிர்பெற்றிருந்தது. ஒளிப்பதிவில் பேக்லைட் எனப்படும் உத்தியை இதுவரை இவரைப்போல இயற்கை ஒளியில் வெகுசிறப்பாகக் கையாண்டவர்கள் வேறு எவரும் இல்லை. இவருக்கு அடுத்தபடியாக அதில் கைதேர்ந்தவராக அசோக்குமார் தனிச்சிறப்புக் கொண்டவராக இருந்தாலும், முதன்முதலாகப் பொன்னிறக் கேசங்களை இயற்கையான பின் ஒளியில் நிகழ்த்திக் காட்டிய சினிமாக் கவித்துவம் அவருடையது. அவருக்குப் பிறகு வந்தவர்களில் இயற்கை ஒளியைச் செறிவாகத் திரைச் சட்டகத்தில் உள்வாங்கிக் கொண்டவர்களுள் அசோக்குமார், ராஜீவ் மேனன். மது அம்பாட் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த உயரங்களைக் கண்டிருப்பினும், அவர் காண்பித்த பச்சை நிறத்தை வேறு எவரும் காண்பிக்கவில்லை. இதற்காக வண்ணக்கலவை செய்யும் கிரேடிங்கில் அக்காலத்தில் எந்தக் கம்பியூட்டர் உபகரணங்களும் இல்லாமல் கைகளால் ஒவ்வொரு காட்சியாகச் சரிசெய்து வந்த காலங்களில் ஆங்கிலத்தில் வில்லி எனப்படும் புதிய உத்தியை இதற்காக அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
(i). பாலுமகேந்திராவுக்கு முன்பும், பின்பும் தமிழ்ச்சினிமாவின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களாக, இங்கு குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?
(i) முன்பு - தேவராஜ், மோகன், பாரதிராஜா, நிவாஸ்
பின்பு - அசோக்குமார். ராஜீவ்மேனன், மதுஅம்பாட்
(ii). இயற்கை ஒளியைக் கையாள்வதில் பாலுமகேந்திரா காட்டிய திறமை, இங்கு எவ்வெவ்வாறு விவரிக்கப்படுகிறது?
இயற்கையின் நுண்மையை சூரிய பிரபையில் பிரதிபலிக்கும் மனிதர்களைக் கடந்த இதர உயிர்களின் அழகை அதன் இயல்போடு மிகைப்படாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டியவர்.
ஒளிப்பதிவில் 'பேக் லைட்' எனப்படும் உத்தியை இதுவரை இவரைப்போல இயற்கை ஒளியில் வெகு சிறப்பாகக் கையாண்டவர்கள் வேறு எவரும் இல்லை.
முதன் முதலாகப் பொன்னிறக் கேசங்களை இயற்கையான பின் ஒளியில் நிகழ்த்திக் காட்டிய சீனிமாக் கவித்துவம் அவருடையது.
இயற்கையான பின் ஒளியில் அவர் காண்பித்த பச்சை நிறத்தை வேறு யாரும் காண்பிக்கவில்லை.
iii). எழுபதுகளின் இறுதியில் தமிழ்ச் சினிமாவில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சியை விவரிக்கும் பாங்கில் நீர காணும் நயத்தைத் தெளிவுறுத்து?.
தமிழ் சினிமா சூழல் கொஞ்சம் முகத்துக்குச் சோப்புப் போட்டு கழுவிக் கொண்டு கண்ணாடி பார்த்து தன்னைத்திருத்திக் கொண்டதாகக் குறிப்பிடல்.
தமிழ் சினிமாவுக்கு சூரிய உதயம் நிகழ்ந்ததாகக் குறிப்பிடல் (சினிமாப் பாணியில் சொன்னால் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சன்ரைஸ்ஷாட் நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்கள்)
(iv). தமிழ்ச் சினிமாவில் இயற்கைச் சூழலை உயிர்ப்போடு காட்சிப்படுத்துவதில் பாலுமகேந்திரா முன்னோடியாக விளங்கியமை நயம்பட விவரிக்கப்படும் பாங்கைத் தெளிவுறுத்துக?
இயற்கைச் சூழல் பாத்திரங்களாக மாறியமை (நாணம், ஓடை, வயல்வெளி. மணற்பரப்பு. பாலம், புதர்கள்)
காற்றுக்குத் தலையாட்டும் ஆற்றோரம் வளர்ந்த நாணல்களில் அழகு.
தமிழ்ச் சினிமா கவித்துவங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தமை.
இதர உயிர்களின் அழகை அதன் இயல்போடு மிகைப்படாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டியமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக