26.12.25

G.C.E. O/L, கம்பியூட்டர், கடந்தகால வினாத்தாள்

 

G.E.C.O/L

கம்பியூட்டர்

கடந்தகால வினாத்தாள்

கவனத்திற்கு

இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுத வேண்டும்.

G.E.C.O/L-2024(2025)

4. 'கம்பியூட்டர்' என்ற சிறுகதையில், கதைசொல்லிக்கு

() கம்பியூட்டர் பற்றிய பரிச்சயமின்மையும்

கம்பியூட்டரின் தோற்றத்தைப் பார்த்துப் பயப்படுதல்.

முன் பின் தெரியாத விவகாரம், முந்திப்பிந்தி வாங்கியும் அனுபவம் இல்லை எனல்.

கம்பியூட்டரில் ஆண், பெண் பேதம் இருப்பதாக நம்புதல்.

கடைக்காரன் கம்பியூட்டர் பற்றிக் கூறிய எவற்றையும் விளங்கிக் கொள்ளமுடியாமை.

கம்பியூட்டர் வாங்குவதற்கான அறிவோ அனுபவமோ போதாமையினால் நண்பர் ஒருவரை அழைத்துச் செல்லல்.

நண்பனுக்கும் கடைக்காரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாது திண்டாடுதல்.

486
கம்பியூட்டர் என்பதைத் தவறாக விளங்கிக் கொள்ளல்.

கம்பியூட்டரைப் பயன்படுத்தும் அறிவு போதாமையினால் இடர்ப்படல்.

() கம்பியூட்டர் பற்றிய அறிவை அவர் பெற்றுக்கொண்ட வகையும்

புலப்படுத்தப்படுமாற்றை விளக்குக.

கடையில் கதைசொல்லிக்கு தோதாக இருந்த ஒருவர் மூலம் கம்பியூட்டர் பற்றி அறிய முற்படல்.

கம்பியூட்டர் பற்றிய உண்மையைத் தானே கண்டறிதலும் சுயமாகத் தானே கம்பியூட்டரில் கதையை அடிக்க (Type பண்ண) முயல்வதும்.

அரவிந்தன் மூலம் கம்பியூட்டரை பயன்படுத்தும் நுணுக்கமான முறைகளைக் கற்றுக் கொள்ளுதல்.

நண்பர் வாயிலாக கம்பியூட்டரைப் பயன்படுத்தும்போது அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ளுதல்.

வெவ்வேறு டைரக்டரி உண்டாக்கி தம் படைப்புக்களைச் சேமித்து வைத்தல்.

 

G.E.C.O/L-2023(2024)

02. (iv). ஒரு திடீர் உந்துதலால்தான் கம்பியூட்டர் ஒன்று வாங்குவதாக முதல்நாள் இரவு எங்கள் வீட்டில்

முடிவாகியது. என் ஒன்பது வயது மகன் அரவிந்தன் தன்னுடைய சிநேகிதர்கள் எல்லாரிடமும்

கம்பியூட்டர் இருப்பதாக அளந்தான். என் ஆசை மனைவியோ ஆர்மோனியப் பெட்டிபோல இதையும்

வளைத்துவிடலாம் என்று ஆர்வமான கனவுகளுடன் காத்திருந்தாள். இது என்ன வெண்டைக்காயா,

நுனியை முறித்துப் பார்த்து வாங்க? கம்பியூட்டர் முந்திப்பிந்தி வாங்கியும் அனுபவமில்லை.

கடைக்காரனுடைய முகலாவண்யம் கதைப்பதற்கு ஆசையூட்டுவதாகவும் இல்லை. வீர்யம் நிறைந்தவன்

போலக் காணப்பட்டான். அவன் தலையில் இருக்கவேண்டிய முடியெல்லாம் மூக்கு வழியாகவும் காது

வழியாகவும் வந்து கொண்டிருந்தன. எனக்கு அவன் சொன்ன விளக்கங்களும், கேட்ட கேள்விகளும்

தலைகால் புரியவில்லை.

(). கம்பியூட்டர் ஒன்றை வாங்குவது இலகுவானதல்ல என்பது எவ்வாறு உணர்த்தப்படுகிறது?

(). 'ஆர்மோனியப்பெட்டிபோல வளைத்துவிடலாம்' என மனைவி எண்ணுதல்

'இது என்ன வெண்டைக்காயை நுனி முறித்துப்பார்த்து வாங்க' என்று கூறுதல்

(). விற்பனையாளரின் தலையில் முடி இல்லை என்பதை ஆசிரியர் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறார்?

(). தலையில் இருக்க வேண்டிய முடியெல்லாம் மூக்கு, காது வழியாக வந்துகொண்டிருந்தன எனக் கூறுதல் மூலம்

 

G.E.C.O/L-2022(2023)

02. (iv). பக்குவமாகப் பணியாரம் செய்து பனை நார்ப்பெட்டியில் மூடி மாடாவில் மறைத்து வைத்ததுபோல

இவ்வளவு கவனமாக இந்தக் கதையை கோப்பிலே செருகி வைத்தேனே! எங்கே போனது, இறக்கை

முளைத்துப் பறந்துவிட்டதா? பனி மூடிய அந்த அதிகாலையிலும் நான் நண்பரைத் தேடிக் கொண்டு

ஓடினேன்.

(). கோப்பினைப் பாதுகாத்த முறைமையை விளக்குதற்கு ஆசிரியர் கையாண்ட உவமையில்

நீர் காணும் சிறப்பினை விளக்குக.

). "பக்குவமாகப் பணியாரம் செய்து பனைநார்ப்பெட்டியில் மூடி மாடாவில்

மறைத்து வைத்ததுபோல்" எனும் உவமை கையாளப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் சார்ந்த விடயமொன்றைத் தெளிவுபடுத்த ஆசிரியர்

கிராமிய வாழ்வியல் அனுபவத்தை உவமையாக்கியிருப்பது.

உவமை மூலம், பக்குவமாக கோப்பு உருவாக்கப்பட்டமையும் அது

கவனமாகப் பேணப்பட்டமையும் சிறப்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.

(). தொலைந்த கோப்பினைக் கண்டுபிடிப்பதில் அவர் கொண்டிருந்த ஆதங்கம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?

). பனி நிறைந்த அதிகாலைப் பொழுதில் நண்பனைத் தேடி ஓடுதல்

4. கம்பியூட்டர் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றை விளக்குக.

() கதையோட்டத்தில் அரவிந்தன் பாத்திரம் பெறும் முக்கியத்துவம்

). கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு மூன்றிலும் அரவிந்தன் எனும் கதாபாத்திரம் முக்கியம் பெறல்

கம்பியூட்டர் வாங்க முன்பே நண்பர்களிடம் வாங்கிவிட்டதாக அரவிந்தன் கூறுதல்

'ஓம் ஸ்ரீராம்' எழுதி கம்பியூட்டரை உபயோகிக்கத் தொடங்குதல்

கம்பியூட்டர் அறிவை சுயமாக வளர்த்துக்கொள்ளல்

கம்பியூட்டரில் பெற்றோர் பரிச்சயம் பெறுவதற்கு அரவிந்தன் காரணமாதல்

கம்பியூட்டர் தொடர்பில் பெற்றோருக்கு ஏற்படும் சிக்கல்களை நீக்க உதவுதல்

அரவிந்தனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு கம்பியூட்டர் மூலமாக மேலும் வலுப்பெறல்

கம்பியூட்டரை இலாவகமாகக் கையாளல்

கம்பியூட்டருடன் தனது பெரும் பொழுதைக் கழித்தல்

தொலைந்துவிட்டது என எண்ணிய கோப்பினை மீளக் கண்டுபிடிக்கக் காரணமாதல்

கம்பியூட்டர் மூலம் கல்வி நடவடிக்கை மேற்கொள்ளல்

() ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு

). கம்பியூட்டர் கடையில் ஏற்பட்ட அனுபவம் பற்றிய விபரிப்பு

கம்பியூட்டரின் தோற்றம் பற்றிய விவரணம்

கம்பியூட்டர் ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றிய விளக்கம்

தனக்கும் மனைவிக்கும் கம்பியூட்டர் பற்றிய பரிச்சயமின்மை பற்றிய விபரிப்பு

கம்பியூட்டர் வாங்குவதைத் தூண்டில் வாங்கிய அனுபவத்தோடு ஒப்பிட்டு விபரித்தல்

காளமேகத்தின் பாடலோடு தொடர்புபடுத்திய கம்பியூட்டர் பற்றிய விபரிப்பு

மனைவி கம்பியூட்டரைப் பயன்படுத்தியமை பற்றிய விபரிப்பு

கம்பியூட்டரின் பல்வகைப் பயன்பாடு பற்றி பாக்குவெட்டி பற்றிய பாடலோடு தொடர்புபடுத்திய விபரிப்பு

தொலைக்காட்சியில் இலயித்திருந்தமை,அச்சந்தர்ப்பத்தில் தொலைந்த கோப்பு கண்ணுக்குப் புலப்படுதல், அதனைக் கண்டு ஆவலோடு

பாய்ந்து செல்லல் முதலானவை பற்றிய விபரிப்பு

 

G.E.C.O/L-2021(2022)

01. (iv). "கம்பியூட்டருடன் அவர்களது பொழுது முக்காலமும் கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்றுச்செய்து பாவித்தார்கள்."

() 'முக்காலமும் கழிந்தது' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() முழுநேரமும் கழிந்தது / முழுப்பொழுதும்

() 'பண்டமாற்று' என்றால் என்ன?

() ஒரு பொருளிற்கு ஈடாக இன்னொரு பொருளைப் பெறுதல்

02. (iv). உருக்கி எடுத்த இரும்பினால் செய்த 'ரெமிங்டன்' தட்டெழுத்துப் பொறியில் நான் ஆரம்பகாலத்

தீட்சை பெற்றவன். அதைத் தூக்க இரண்டு பேரும், வைக்க நாலு பேரும் வேணும். நகல் எடுக்கும்

மெசின்கள் வருவதற்கு முன்னரான ஒரு காலம் அதபு ஏழு கார்பன் தாள் வைத்து, கைகளை நல்ல

உயரத்துக்குத் தூக்கி, மூச்சைப் பிடித்து 'தேடிக் குத்தி' டைப் செய்வதில் நான் ஒரு விண்ணன் என்று

பேர் வாங்கியவன். இப்படி ஒரு ஆழ்ந்த பரவசத்தோடு நான் தட்டெழுத்து லீலைகள் செய்யும்போது

அம்மி பொளிவதுபோல ஒரு விதமான சத்தம் வருமென்று சொல்வார்கள்.

() 'ரெமிங்டன்' பொறியில் தட்டச்சுச் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய கடும் பிரயத்தனம்

இங்கு எவ்வாறு விவரிக்கப்படுகின்றது?

() ஏழு கார்பன்தாள் வைத்து கைகளை நன்கு உயரத்தூக்கி, மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுத்துக்களை தேடிக் குத்தி' டைப் செய்தல்.

() அப்பொறியில் தட்டச்சுச் செய்வதில் தனக்குள்ள பரிச்சயத்தை, கதைசொல்லி எவ்வாறு

வெளிப்படுத்துகின்றார்?

(). டைப் செய்வதில் விண்ணன் எனப் பேர் வாங்கியமை.

ஆழ்ந்த பரவசத்தோடு தட்டெழுத்து லீலைகள் செய்தல் எனல்.

 

G.E.C.O/L-2020

7. கம்பியூட்டர் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றை விளக்குக.

() கதாசிரியருக்கு கம்பியூட்டர் பற்றிய முன் அனுபவமின்மை

() கம்பியூட்டர் பற்றிய அனுபவமின்மை

கம்பியூட்டரின் தோற்றத்தைப் பார்த்துப் பயப்படுதல்

கம்பியூட்டரில் ஆண், பெண் பேதம் இருப்பதாக நம்புதல்

கம்பியூட்டர் வாங்குவதற்குத் தனது அறிவு போதாமையால் தன் நண்பனை அழைத்துச் செல்லுதல்

தன்நண்பனுக்கும் கடைக்காரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை விளங்கிக் கொள்ளமுடியாது திகைத்தல்

'486 கம்பியூட்டர்' என்பதைத் தவறாக விளங்கிக் கொள்ளல்

() அந்த அனுபவமின்மையோடு தொடர்புபடுத்தி தனது அமெரிக்க அனுபவத்தை விபரிக்கும் விதம்

() - அமெரிக்காவில் தூண்டில் கடைக்குச் சென்றபோது பட்ட அனுபவத்துடன் கம்பியூட்டர் பற்றிய தனது அறிவின்மையை தொடர்புபடுத்துதல்

தூண்டில் கடையின் பிரமாண்டத்தைக் கண்டு வியத்தல்

தூண்டில் கடையில் பணிப்பெண் கேட்ட கேள்விகள் புரியாது திகைத்தல்

 

G.E.C.O/L-2019

01. (ix). "நண்பர் 486 கம்பியூட்டர், 486 கம்பியூட்டர் என்று உச்சாடனம் செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப்

பற்றி ஒரு பரணி பாடினார்"

() இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரபந்தம் யாது?

. பரணி

() உச்சாடனம் செய்தல் என்பதன்மூலம் உணர்த்தப்படுவது யாது?

. மீண்டும் மீண்டும் கூறல்

தொடர்ந்து கூறல்

02. (v). அன்றிலிருந்து புகையிலைக்கன்றுக்குப் பாத்தி கட்டுவதுபோல கணிப்பொறித் தளத்தை மூன்று

பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் நானும், இன்னொரு பகுதியில் மனைவியும், மீதியில்

அரவிந்தனுமாகப் பயிர் செய்தோம். எங்கள் படைப்புகளை இந்த வரப்புக்குள் வைத்துக் கொண்டோம்.

ஆரம்பத்தில் எனக்குக் கம்பியூட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஓர் இணக்கம் ஏற்பட்டது. அது

தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிடத் தொடங்கியது.

() கம்பியூட்டரை இலகுவாகப் பயன்படுத்துவதற்குத் தான் கையாண்ட உத்தியை ஆசிரியர் எவ்வாறு

விவரிக்கிறார்?

. புகையிலைக் கன்றுக்குப் பாத்தி கட்டுவது போல கணிப்பொறித் தளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து படைப்புகளை எல்லைப்படுத்தி வைத்துக் கொண்டோம் என்பதினூடாக

() 'சூட்சுமத்தையெல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிடத் தொடங்கியது' எனும் வாக்கியத்தால்

விளங்கிக்கொள்ளக்கூடியது யாது?

. கம்பியூட்டர் பற்றிய தொழில்நுட்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிச்சயமாதல்

 

G.E.C.O/L-2018

01. (ix). "இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?" என்றேன்.

() 'பைல்' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம் யாது?

() கோப்பு / கோவை

() 'இஞ்ச எப்பிடி' என்ற பேச்சு வழக்குத் தொடரின் எழுத்து வடிவத்தை எழுதுக.

(). இங்கு எப்படி / இங்கே எப்படி

03. கம்பியூட்டர் என்ற சிறுகதையில்,

() எழுத்தாளரையும் அவரது குடும்பத்தையும் கம்பியூட்டர் அன்னியோன்னியமாக்கிய விதத்தையும்

() எழுத்தாளரின் கூற்றாக

கணிப்பொறி எங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. நாங்கள் கம்பியூட்டர் பரிபாஷையில் பேசிக்கொண்டோம் எனல்.

எழுத்தாளர் மனைவியுடன் ஊடாடுகிற போது மேகலா என்ற பெயரை மேகா என்று எழுதுவதைக்கண்டு அடையும் மகிழ்ச்சி.

அவர்கள் பரிமாறிக்கொள்ளும் பரிபாஷையினூடாக வெளிப்படுத்தப்படும் அன்னியோன்யம்.

மகனுக்கும் மனைவிக்கும் இடையிலான உரையாடலிலும் செயல்களிலும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதை விபரித்தல்.

எழுத்தாளரது, தொலைந்துபோன கதையை மகன் மீளப்பெற்றுக் கொடுத்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி.

"கணிப்பொறியின் வருகையால் எங்கள் வீடு விஞ்ஞானத் துள்ளல் துள்ளி வேகமாக முன்னேறியது" என்ற ஆசிரியர் கூற்று.

() அதனை நகைச்சுவையுடன் எழுத்தாளர் சித்திரிக்குமாற்றையும்

விளக்குக.

(). வீட்டிற்கு கணிப்பொறி வந்தவுடன் அதனை இறக்குதல் பற்றிச் சித்திரித்தல்.

உதாரணம் : "மனைவி ஆலத்தி எடுக்க நிற்பது போல் ஆவலுடன் வாசலில் நின்றாள்"

"நிறைபொங்கல் பானையை இறக்குவது போல மெத்த மெதுவாக இறக்குதல்"

மனைவி தன் தோழிக்கு இயல்பாக அளிக்க விரும்பும் பதிலில்

"கொஞ்சம் இரு' எனக்கு ஞாபகத்தில் இல்லை. கம்பியூட்டரைப் பார்த்துச் சொல்லுறன்"

மனைவியுடன் கணிப்பொறிப் பரிபாஷையில் பேசுவது

Press any key to entre

If you want to escape press here

முதலானவற்றினூடாக நகைச்சுவையாக சித்திரித்தல்

 

G.E.C.O/L-2016

01. (vii). "நண்பா கம்பியூட்டருக்கு தலபுராணம் எழுதியவர் விடுவாரா ? இப்போது வட்டியும் முதலுமாக அவர்களைப்

போட்டு குடைகுடையென்று குடைந்தார் ... "

() 'தலபுராணம்' என்றால் என்ன?

() தலமொன்றின் வரலாற்றையும் சிறப்புக்களையும் எடுத்துக் கூறுவதாகப் புராண வடிவில் அமைந்த நூல்

() 'தலபுராணம்' என்ற தொடர் இங்கே என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?

() கம்பியூட்டர் பற்றிய முழு விபரத்தையும் அறிந்தவர் | சகல விடயத்தையும் பற்றிய அறிவு

04. கம்பியூட்டர் என்ற சிறுகதையில் அதன் ஆசிரியர்,

() கம்பியூட்டர் பற்றி விபரிப்பன்வற்றையும்

கம்பியூட்டரை ஆண், பெண் என இரண்டாக வகைப்படுத்துதல்

பழக்கத்திற்கு கொண்டுவர களநாட்கள் ஆவதும் பிகுபண்ணிக் கொண்டே இருப்பதும் ஒருவாறு பழக்கத்திற்கு கொண்டு குணங்கள் வந்து விட்டால் கடைசி வரை ஒத்துழைத்து இயங்குவதும் பெண் கம்பியூட்டரின்

ஆரம்பத்தில் அதிகமாக ஒத்துழைப்பதும் நாள் போகப்போக ஒத்துழைக்க மறுப்பதும் ஆண்

கம்பியூட்டரின் குணங்கள்

கணிப் பொறி ஒரு இராட்சத வேலைக்காரன்.

தவறான கட்டளைகளை பிறப்பித்துவிட்டால் தானே எஜமானன் ஆகிவிடும்.

சொல்லும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்யும்.

பயந்து பயந்து அணுகினால் எட்டப் போய்விடும்.

() அதற்கு அவர் கையாண்ட உத்திகளையும்

விளக்குக.

() கையாண்ட உத்திகள்

கச்சிதமான நுணுக்கமான விபரிப்பு

எளிமையான சொற்களைக் கையாளல்

நகைச்சுவை கையாளல்

கணினியை மனித நிலைப்படுத்திப் பேசுதல். குடும்ப அங்கத்தவர்.

நடைமுறை அனுபவங்களை உதாரணமாக தருதல்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக