G.E.C.O/L
அற்றைத்திங்கள்
கவனத்திற்கு
இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுத வேண்டும்.
G.E.C.O/L-2024(2025)
01. (vi). "இப்போ இந்த மலையைப் பிரிவது மலையைவிடக் கூடுதலாநக் கனக்கிறதே, ஆனால், என் அருமைச்செல்வங்களே ... புறப்பட வேண்டியதுதான்."
(அ) பறம்பு மலையைப் பிரிவதில் உள்ள அதிக வேதனை எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?
(அ) மலையை விட கனக்கிறது என்பதனூடாக பிரிவது மலையை விட கனக்கிறது.
(ஆ) அதைப் பிரிந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்த்தும் தொடர் யாது?
(ஆ) புறப்பட வேண்டியதுதான்
7. 'அற்றைத் திங்கள்' நாடகத்தில் பாரிமகளிரின் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு,
(அ) புறநானூற்றுப் பாடல்
(அ) புறநானூற்றுப் பாடலினூடாக துயரம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதம் "அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்... என்ற பாடலினூடாக
அன்று தந்தை எம்மோடு இருந்தார் பறம்பு மலை எமக்குரியதாக இருந்தமை.
இன்று எமது தந்தை இல்லை மூவேந்தர்கள் பறம்பு மலையைக் கைப்பற்றி விட்டமை இவற்றைக் கூறுவதன் மூலம் துயரம் வெளிப்படுகின்றமை.
(ஆ) நாட்டார் பாடல் மரபு
ஆகியன பொருத்தமுறக் கையாளப்பட்டுள்ள வகையினை விளக்குக.
(ஆ) அற்றைத்திங்கள் நாடகத்தில் பாரி மகளிரின் துயரத்தை வெளிப்படுத்த நாட்டார் பாடல் மரபு
(இங்கு தாலாட்டுப்பாடல்) கையாளப்பட்டுள்ளவாறு:
தொட்டிலில் அசைந்தபடியே கதைகேட்டு மகிழ்ந்திருந்தமை
அரளிப்பூத் தண்டாலே அத்தை அடிச்ச கதை.....
மல்லிகைப் பூச் செண்டாலே மாமன் அடிச்சகதை
போரின் கொடூரத்தால் உறவுகளை இழந்தமை பற்றிக் கூறி வருந்துதல்
அரளிப் பூ தண்டு எடுக்கப் போன அத்தை திரும்பலையே
மல்லிகைப் பூ செண்டு கட்டப் போன மாமன் மீளலையே
போரின் கொடுமையால் தொட்டில்வரை இரத்த வெள்ளம் எனக் கூறல்
நிலவை இரசிக்க முடியாத தன்மையை வெளிப்படுத்தல்
பால் வார்த்த நிலா முகத்தில் பற்றி விட்ட தீப்பந்தம்
நடை வண்டி, விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை வைத்து விளையாடிய நினைவுகளை மீட்டி வருந்துதல்
அழகான நடை வண்டி
பழக ஒரு மரப்பாச்சி..
அசைந்தாடும் கிலுகிலுப்பை
4. அற்றைத்திங்கள் என்ற நாடகத்தில்,
(அ) பாரி இருந்த காலத்திலும் அவனை இழந்த காலத்திலும் பறம்புமலை மக்களின் மனநிலை
கவலையற்ற வாழ்வு
போர் முற்றுகை நடந்த பொழுது மலைவாழ் பெண்கள் பகைவர்களுடைய குதிரைகளை விளையாட்டாக எண்ணிக் கொண்டிருத்தல்.
பாரி போரில் தோற்கமாட்டான், பறம்புமலையும் வீழாது என அசையாத நம்பிக்கை கொண்டிருத்தல்
கள்ளைப் பகிர்ந்துண்ணல்
பாரியை இழந்த காலத்து மனநிலை
பாரியின் இழப்பில் மக்கள் கையறுநிலையில் இருத்தல் (விதிர் விதிர்த்துப் போயிருத்தல்
(ஆ) பாரிமகளிரும் கபிலரும் தம் நாட்டின்மீது கொண்ட ஈடுபாடு
ஆகியன புலப்படுத்தப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.
(ஆ). பாரி மகளிரன் ஈடுபாடு
மலைமடியில் தாலாட்டுக்கேட்டு சுகமாக கண்வளர்ந்தோம் எனல்
குறத்திகள் தொடுத்துத் தந்த குறிஞ்சி மலர்மாலை வாடினாலும் மணம் போகலையே எனல்
பறம்புமலையில் அனுபவித்தவற்றை விட்டுப் போகமுடியாது வருந்துதல்
பறம்புமலையை, பால்வார்க்கும் நிலவை எப்படி எடுத்துச் செல்வது, மக்களின் அன்பை எப்படி விட்டுச் செல்வது எனல்
வரகும் எள்ளும் முளைத்த நிலத்தையும், கள் மணக்கும் குடிசையினையும் விட்டுப்போகமுடியாது தவித்தல்
கபிலரின் ஈடுபாடு
இயற்கையின்மீது கொண்ட பற்று
அருவியின் ஆர்ப்பரிப்பு, பறவைகளின் பேச்சொலி, இலைகளின் சலசலப்பு இவைகளைக்காதுகொடுத்துக் கேட்டல்
பறம்புமலையைப் பிரிவது மலையைவிடக் கனக்கிறது எனல்
நீரை ஒரு முடக்குக் குடியுங்கள், வாசனைப் பூக்களை நுகருங்கள் அவற்றை நினைத்துக்கொண்டு செல்லுங்கள் எனல்
பாரியுடனான நட்பை நினைத்து ஏங்குதல்
பறம்புமலைச் சூழலை அனுபவித்து அது இனிக் கிடையாது என ஏங்குதல்
நீர்வாரும் கண்களின் ஈரத்தில் பறம்புமலையின் அழகிய காட்சி நிலைத்து நிற்கும் எனல்.
ஆற்றாமையோடு பறம்பு மலையை வாழ்த்திச் செல்லுதல்
G.E.C.O/L-2020
4. அற்றைத் திங்கள் என்ற நாடகத்தில்
(அ) நாடிழந்த பாரி மகளிரின் சோகம்
(அ). பாரிமகளிரின் சோகம்
அற்றைத் திங்கள் ....... பாடலூடாக
அன்று அவ்வெண்ணிலவில் நம்மோடு இருந்த எந்தையும் நம் குன்றும் இன்று எம்மோடு இல்லையே என ஏங்குதல்
நாடகத்தில் ....
தான் கட்டிய கூட்டில் தாய்முகம் அறியாத தம்மை புறாக்குஞ்சுகள் போல அன்போடு பாதுகாத்து தந்தை வளர்த்தமையை நினைவு கூர்தல்
சிறுவயதில் தாம் அனுபவித்து மகிழ்ந்த மரப்பாச்சியையும் குறிஞ்சிப்பூவையும் கண்டு இரங்குதல்
பறம்புமலை மக்கள் தம்மீது காட்டிய அன்பை நினைந்து ஏங்குதல்
மகிழ்வோடு மக்கள் வாழ்ந்த குடில்களைப் பிரிந்து செல்லவேண்டி வந்ததை நினைந்து ஏங்குதல்
(ஆ) பறம்புமலை மீதான கபிலரின் பற்று
என்பன புலப்படுமாற்றை விளக்குக.
(ஆ) பறம்புமலைமீது கபிலரின் பற்று
பறம்பு மலையைப் பிரிவது மலையைவிடக் கனக்கிறது எனல்
சுனைநீரை ஒரு முடக்குக் குடியுங்கள், வாசனைப் பூக்களை நுகருங்கள், அதை நினைத்துக்கொண்டு செல்லுங்கள் எனல்
நீர் வாரும் கண்ணில் பறம்பு மலையின் அழகிய காட்சிகள் நிற்கும் எனல்
பறம்பின் தலைவன் பாரியுடனான நட்புப் பற்றி நினைந்து ஏங்குதல்
பறம்புமலைச் சூழலை அனுபவித்து, இனி அது கிடையாதே என ஏங்குதல்
ஆற்றாமையோடு பறம்பு மலையை வாழ்த்திச் செல்லுதல்
01. (v). "ஏலம்பூ வாய் பொசுங்க
எரியுறது தீக்கொழுந்து
காலப்புனல் கனக்கும்
கண்ணீரையும் சுமந்து"
(அ) 'ஏலம்பூ வாய்' என்பதால் நீர் விளங்கிக்கொள்வது யாது?
(அ). வாசனையுள்ள வாய் / நறுமணமுள்ள வாய்
(ஆ) 'காலப்புனல்' என்பதில் இடம்பெற்ற அணி யாது?
(ஆ). உருவக அணி
04. அற்றைத்திங்கள் என்ற நாடகத்தில்,
(அ) புலப்பெயர்வின் அவலம்
பாரியின் பறம்பு மலையை கைப்பற்றியமையும் பாரியின் இறப்பும் நிகழ்ந்ததன் பின்னர் பாரி
மகளிர் பறம்பு மலையை விட்டு புலம் பெயரும் சூழல் ஏற்படுகிறது. அவர்கள் கபிலருடன்
புறப்படுகிற சூழலை அடிப்படையாகக் கொண்டு புலம் பெயர்வின் அவலம் வெளிப்படுத்தப்படல்.
நாட்டுப் புறத் தாலாட்டுப் பாடலின் ஊடாக மன அவலத்தை வெளிப்படுத்துதல்.
அழகான நடை வண்டி
அசைந்தாடும் கிலு கிலுப்பை ..
அங்கவை, சங்கவை ஆகியோரின் கூற்றுகளாக அமைவன.
பறம்பு மலையின் பால் வார்க்கும் நிலவை எவ்வாறு எடுத்துச் செல்வது.
இந்தப் புன் செய் நிலங்களை விட்டுட்டுப் போக வேண்டியதுதான்.
குடிசைகளை விட்டுப் போக வேண்டியது தான்.
கபிலர் வாயிலாக
இப்போது மலையைப் பிரிவது மலையை விடக் கூடுதலாகக் கனக்கிறது.
பறம்பு மலை சுனை நீரை முடிந்த மட்டும் குடியுங்கள்.
மலைப் பூக்களின் மணங்களை நுகருங்கள் என்று குறிப்பிடுகிறார்
(ஆ) நாடகாசிரியரின் படைப்பாற்றல்
என்பன புலப்படுமாற்றினை விளக்குக.
(ஆ.) நாடகாசிரியரின் படைப்பாற்றல்.
புறநானூற்றுச் செய்யுள் வடிவத்திற்கு புது வடிவம் கொடுத்தல். நாடக வடிவம்
களச்சித்திரிப்பு
பறம்பு மலை மீதான முற்றுகை, பிரிவு ஆகியவற்றைக் கவிதையாகவும் உரை நடையாகவும் சித்திரித்தல்.
பாத்திரப்படைப்பு
பண்டைய கதையொன்றில் குறிப்பிடப்படும் பாத்திரங்களைப் படைத்து அவற்றின் ஊடாகக்கதையை நகர்த்தல்.
உணர்வலைகள்
புலம் பெயர் நிலையின் அவலத்தையும், சோகத்தையும் இணைத்து வெளிப்படுத்தல்.
மொழி நடைப் பிரயோகம் (செம்மொழிச் சொற்கள்)
சமகாலத்துடன் தொடர்புபடுத்துதல்.
G.E.C.O/L-2016
02. (v). "என் அருமைச் செல்வங்களே ... புறப்பட வேண்டியதுதான். பறம்பு மலையின் இனிய சுனை நீரில் ஒரு
முடக்கு குடியுங்கள். கடைசியாக் முடிந்த மட்டுக்கும் இந்த மலைப்பூக்களின் மணத்தை இழுத்து மூச்சடக்கிக்
கொள்ளுங்கள். கடந்து செல்கையில் காற்று வீசம். ஆனால், இந்த மலைப்பூக்களின் மணம் ... பறவைகளின் ஒலி
ஓயாது. பாரி இருந்தால் பேச்சுக் கொடுப்பார் ... புறப்படுகிறோம் பறம்பே ... மதுவிலும் புலாலிலும் களித்திருந்த
நட்பு நம்முடையது."
(அ) இக்கூற்று எத்தகைய மன்நிலையில் கபிலரால் கூறப்பட்டது?
(அ) சொந்த நாட்டை விட்டுப் பிரிகின்ற சோகமான மனநிலையில்
(ஆ) பாரியிடம் கபிலருக்குள்ள ஈடுபாடு எவ்வாறு புலனாகின்றது?
(ஆ) பாரி இருந்தால் பேச்சுக் கொடுப்பார், மதுவிலும் புலாலிலும் களித்திருந்த நட்பு நம்முடையது என்ற கூற்றுக்களினூடாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக